Tuesday, April 3, 2007

தற்கொலை!

நான் என் அறையில் தனியாக இருந்தேன். இன்று சனிக்கிழமை. ரூமில் எல்லொரும் நான் எழுந்திரிக்கறதுக்கு முன்னாடியே எங்கேயோ கிளம்பி போயிட்டாங்க. என்னையும் கூப்பிட்டாங்க, நான் தான் வரலைன்னு சொல்லிட்டேன். மற்ற நாளில் வேலை பளுவில் கவலைகளை மறந்திருப்பேன். ஆனா இன்னிக்கி என்ன பண்ணுறது. காலைல இருந்து ஒரே தலை வலி. தலைக்கு உள்ள யாரோ ஆணி அடிக்கிற மாதிரி இருக்கு. நடந்தத நினைச்சா மனசு ரொம்ப வலிக்குது. அமுதா என் மேல எவ்ளோ அன்பா இருப்பா. அவ எப்படி மாறி போனா. பணத்துக்காக தான் என்னை வேணாம்னு சொன்னா. எல்லாருக்கும் இங்க பணம் தான் முக்கியம். எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கல. அவ கல்யாணத்தன்னிக்கு நான் விஷம் சாப்பிட்டேன். ஆனா என்னை ஆஸ்பத்திரில சேர்த்து பிழைக்க வெச்சிட்டாங்க. எங்க அம்மா வேற அழுது ட்ராமா பண்ணி, ஆனா நான் எதுக்கும் அசரல. அமுதாக்கு எப்படி மனசு வந்துச்சு. எனக்கு உயிரோட இருக்கவே பிடிக்கல. இப்படி கஷ்டப்படறதுக்கு அன்னிக்கே போய் சேர்ந்திருக்கலாம்.
போன் அலற, ரவியா தான் இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டே ஹலொ! சொன்னேன். ரவியின் குரல் ஈனமாக கேட்டுச்சு "முத்து நான் சாப்பிட வரலடா. என் ரூமுக்கு வராதே".ஏன் வரலேன்னு கேட்டா ஏதோ உலறிட்டு போன வெச்சிட்டான். சரி, தனியா தான் போயி சாப்பிடனும். ஆனா எனக்கு ரவி மேல சந்தேகம். "பய குரல் சரி இல்லயே. ஏதாவது குடிச்சு இல்ல அடிச்சு இருப்பானோ? அவன் ரூமுக்கு போய் பார்த்தா என்ன?" நிறைய யோசிச்சு போயி பார்க்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.அவன் ரூமுக்கு போயி கதவை தட்டுனா கதவு திறந்து தான் இருக்கு. உள்ளே போனா பய தூங்கிட்டு இருக்கான். சரி திரும்பி போயிடலாம்னு நினைச்சா திடீர்னு பேய் மாதிரி எழுந்தான்.
அப்படியே திருப்பி படுத்துட்டான். என்னை பார்த்த மாதிரியே தெரியல. அவன கண்கொட்டாம பார்த்ததுல எனக்கு புரிஞ்சது என்னனா பையன் எதையோ பார்த்து பயந்துட்டான் போல. பக்கத்துல போயி நான் சொன்னேன் "ரவி இங்க தான் இருக்கேன். பயப்படாதே!". அஞ்சு நிமிஷத்துல 3 தடவை அதே மாதிரி எழுந்திருச்சுருப்பான். திடீர்னு என் கையப்பிடிச்சு அவன் நெஞ்சுல வெச்சு அழுத்த சொன்னான். அப்போ தான் எனக்கு புரிஞ்சிச்சு. ஐயோ இவனுக்கு நெஞ்சு வலியா? வலி தாங்காம தான் எழுந்திரிச்சானா? நான் கொஞ்ச நேரம் நெஞ்ச தடவினேன். போய் டாக்டர கூப்பிடலாம்னா, அவன் என் கைய விடவே இல்ல.
அப்படியே அரை மணி நேரம் போயிருக்கும். ஆனா அவனுக்கு வலி குறைஞ்ச மாதிரி இல்ல. சரி கண்டிப்பா போய் டாக்டர கூப்பிடனும்னு அவன் கைய உதறிட்டு எழுந்தா அவன் மெதுவா சொல்றான் "டாக்டர கூப்பிடாதே!" நான் ஒரே பீலிங்க்ஸோட (feelings) சொல்றேன் "ஏண்டா?". ரவி கண்ணை திறந்து சொல்றான் "மாமே! நீ மட்டும் ஏப்ரல் பூல் ஆனா பத்தாதாடா?".சொல்லிட்டு கெக் கெக் கெகெகெகே..ன்னு ஓரே சிரிப்பு. காணாம போனவனுங்க எல்லாம் அவன் ரூம்ல சிரிச்சுட்டு இருக்கானுங்க. இனிமே தற்கொலை வேணாம்னு முடிவு பண்ணிட்டேங்க. வெறும் கொலை தான். ரவி என் முகத்தை பார்த்து, என் மனசை புரிஞ்சுக்கிட்டு ஓடறான். கொஞ்சம் புடிச்சு தாங்களேன்.

5 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

nalla irukuppa

Sivakumar said...

Nalla pathivu!

CVR said...

nice one! :)